யாழ் பருத்தித்துறை வைத்திய சாலைக்குள் புகுந்த கார்..!

0

பருத்தித்துறை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்துக்குள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று புகுந்துள்ளது.

நேற்று மாலை பருத்தித்துறை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்துக்குள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனால் காருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் மதில் மற்றும் கட்டிடத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிஸ்ட்ர வசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.