விக்கியிடம் இருந்து விலகி புளொட்டுடன் ஒட்ட முயலும் ஐங்கரநேசன்..!

0

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகவும் விசுவாசியாகவும் கருதப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்றத் தேர்தலில் புளொட்டுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒன்றி்ல் போட்டியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தமிழ்பொறிக்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகவும் 2013 வரை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்த சித்தார்த்தனைத் தொடர்பு கொண்ட தமிழ்த் தேசியப் பசுமை இயகத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் அக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றைத் தனக்குத் தரும் படி கோரியுள்ளார்.

எனினும் அதற்கு உடனடியாக எந்தச் சாதகமான பதிலையும் வழங்காத சித்தார்த்தன் தான் கொழும்பில் இருப்பதால் யாழ்ப்பாணம் வரும் போது நேரில் சந்தித்துப் பேசுவோம் எனக் கூறியுள்ளார் .

இந்த தகவலை அறிந்த முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தனது நம்பிக்கைக்கு உரிய முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை என அவர் தனது முக்கியஸ்தர்களிடம் கூறியுள்ளார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறியின் அதிர்வுகள் தொடரும்..