கொரோனா தாக்கத்துக்கு உள்ளான இருவரின் அறிக்கை வெளியாகியது..!

0

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற சந்கேதத்தின் பேரில் அங்கொடை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை என முதலாம் கட்ட வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு பேரின் குருதி மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் முதலாவது கட்ட வைத்திய பரிசோதனைகளை உறுதிப்படுத்த இரண்டாம் கட்ட வைத்தியப் பரிசோதனைகள் இடம் பெறுவதாகவும் அந்த அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் எனவும் வைத்திய சாலை வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

சுகாதார அமைச்சு எச்சரிக்கை

சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பலவற்றில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகின்றமையே இதற்கு காரணமாகும்.

காய்ச்சல், இருமல், தடுமல், மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.