வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது..!

0

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு (24) இரவு 8.00 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் நான்கு இளைஞர்ளை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சா பரிமாற்றம் இடம் பெறுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினர் புதிய பேருந்து நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நான்கு இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த வவுனியா கோவிற்குளம் மற்றும் ஈரற்பெரியகுளம் பகுதியினை சேர்ந்த 35,33,32,28 வயதுடைய நான்கு இளைஞர்களை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதும் இன்று வரை நீர்கொழும்பு முதல் யாழ் வரையான கடற் பகுதியூடாக வரும் கேரள கஞ்சாவினை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.

இதே பாதையூடாக கஞ்சாவிற்கு பதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் கடத்தி வந்து ஏப்ரல் 21 போன்ற பயங்கரவாத சம்பவங்களை நாட்டில் மீண்டும் நிகழ்த்த முடியாதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.