கிளிநொச்சியில் இளம் பெண் வெட்டிப் படுகொலை..!

0

கிளிநொச்சியில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் சகுந்தலா என்ற 24 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சுகந்தன் என்பவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் 5 வருடங்களிற்கு முன்னர் திருமணம் செய்தனர். கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இருவருக்கும் இடையில் காணப்பட்ட குடும்ப முரண்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குறித்த பெண் தனது சிறிய தாயாரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் தொலைபேசி உரையாடலில் இருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வருகை தந்த பெண்ணின் கணவர் பெண்ணை அழைத்து அவரை வெட்டிக் கொலை செய்ததுடன், தானும் வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் கணவரையும் வெட்டுக் காயங்களிற்கு உள்ளாகிய பெண்ணின் மற்றுமொரு சகோதரியையும் உறவினர்கள் வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளி. தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.