சேட்டைவிட்ட இராணுவ சிப்பாயை துவைத்து காயவிட்ட வவுனியா மக்கள்..!

0

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் தமிழ் பெண் ஒருவருடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாயை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சற்று நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு ஒன்று கூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலிற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில்,

குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறு நீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்.

பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவ சிப்பாய் எனத் தெரிவித்தார். பின்னர் தாம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை பொலிசார் குறித்த நபரை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.