மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜிப்ரிக்கு வவுனியாவில் அஞ்சலி..!

0

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு வவுனியா நகரசபையில் அக வணக்கத்துடன் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் அமர்வு இன்று (வியாழக் கிழமை) காலை 9.30 மணிக்கு இ.கெளதமன் தலைமையில் ஆரம்பமானது. இந்நிலையில் இயற்கை எய்திய சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நகரசபையின் தலைவரினால், அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு அக வணக்கம் செலுத்தி சபை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அனைவரும் எழுந்து ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தினர்.