யாழில் ஆண் கொலை; பிரபல ஜனநாயகக் கட்சியின் ஊழியர் கைது..!

0

கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் கோவில்களில் தொண்டு செய்து தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

ரத்தினம் குகேந்திரன் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டவராவார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் அவரது சடலத்தில் காணப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோப் நாயின் உதவியுடன் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றை கண்டறிந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

“நேற்று செவ்வாய்க் கிழமை இரவு வீட்டுக்கு வந்த அவர் என்னை வன்புணர்வதற்கு முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்” என அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரைத் தாக்கிய கம்பியை தண்ணீரால் கழுவி வைத்ததுடன், வீட்டையும் கழுவி சந்தேகநபர் சுத்தப்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார். கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண்ணின் வாக்கு மூலத்தில் முரண்படுகள் காணப்படுவதுடன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிசாரால் கூறப்படுகின்ற போதும் குறித்த பெண் இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறுகின்ஆர்.

அதுபோல் குறித்த அனர்த்தம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்காது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார்.

அடுத்து குறித்த நபரை வீதியில் கொண்டு சென்று போடுவதற்கு உதவியது யார்?

ஏற்கனவே குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவரா?

போன்ற பல கேள்விகளுக்கு பொலிசார் விரைவில் விடை தேட வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..