மாத்தறையில் ஆண் குழந்தை பெற்ற 26 வயது இளைஞன்..!

0

மாத்தறையில் வயிற்று வலி என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒரு குழந்தை பெற்றுள்ளார். நேற்றிரவு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் குறித்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை உட்பட அனைத்து தகவல்களும் ஆணின் பெயரிலேயே பதிவாகியிருந்தது.

வைத்திய சாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரிகள், சோதனையிட்ட பின்னர் ஆண்கள் வோட்டுக்கு குறித்த இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு வலி அதிகரித்தமை தொடர்பில் சோதனையிட்ட வைத்தியர்கள், அவர் ஆண் பெயரிடப்பட்ட பெண் எனவும் குழந்தை பிரசவிக்க தயாராக இருப்பதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.

அதன் பின்னர் வைத்தியர்கள் அவரை பெண்கள் பிரிவில் அனுமதித்ததுடன் ஆண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்துள்ளார்.

குறித்த பெண் 26 வயது தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் முச்சக்கர வண்டி சாரதியாகவும் செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆள் மாறாட்டம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வைத்தியர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பாதுகாப்பு கருதி ஆண் போன்று செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பொறியுடன் தொடர்பிலிருங்கள்.