நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னாரில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணிகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிஷாட்டின் சகோதரருக்கு விளக்கமறியல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
மன்னார் பிரதேசத்திலுள்ள காணிக்கு போலி உறுதி பத்திரம் தயாரித்தமை தொடர்பில் ரிப்கான் பதியுதின், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.