யாழ் பண்ணைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி படுகொலை..!

0

யாழ் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரே இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று (புதன் கிழமை) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவன் ஆகியோர் கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இருவரும் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இதன் போது, சிறிய கத்தியினால் மனையின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்துள்ளார்.

இருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும், பெண்ணின் கணவரான இராணுவச் சிப்பாய், பரந்தன் இராணுவ பொலிஸ் பிரிவின் மருத்துவ வைத்திய சாலையில் கடமையாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. பெண், யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கின்றார்.

பெண்ணிற்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் குறித்த இராணுவச் சிப்பாயுடன் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் போது பெண்ணுக்கு இன்னொருவருடன் காதல் ஏற்பட்டதாகவும், அதையறிந்த இராணுவச் சிப்பாய், பெண்ணை அழைத்து இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் பெண்ணின் சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்ததுடன், மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்ற போது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.