நடிகர் சாருக்கானுக்கு குண்டு வைத்தது யார் என தெரியும் – ரஞ்சன் ராமநாயக்க..!

0

கங்கொடவில சோம தேரரின் நினைவு நாளின் போது சாருக்கானுக்கு குண்டு வைத்தது யார் என்று சீனாவில் இருந்து நண்பர் ஒருவர் எனக்கு கூறினார்.

அதனை நான் கள்ளத்தனமாக பதிவு செய்தேன். மீண்டும் அதனை உறுதி செய்தேன். இது தொடர்பில் உதய கம்மன்பிலவிடம் கேளுங்கள். அன்று சாருக்கான் கொல்லப்பட்டிருந்தால் இன்னும் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 2004ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி இந்திய நடிகர் சாருக் கான் பங்கு பற்றிய இசை நிகழ்ச்சியில் குண்டு தாக்குதல் இடம் பெற்றது.

இந்த குண்டு தாக்குதலில் புகைப்பட ஊடகவியலாளர் லங்கா ஜயசுந்தர, நட்சத்தி ஹோட்டல் ஊழியர் டிலானி மஹேஷிகா ஆகியோர் கொல்லப்பட்டு, நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு முன்னர், கங்கொடவில சோம தேரரின் முதலாம் ஆண்டு நிறைவு நாளில் குறித்த நிகழ்ச்சியை இரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய அரசிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அச் சம்பவத்தை புலிகளுடன் தொடர்புபடுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.