கோட்டாபய அரசுக்குள் பாரிய மோதல்; வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்..!

0

ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணையுமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஆளும் கட்சியில் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

எனினும் கோட்டாபய ராஜபக்சவுடன் இணையும் எந்த தேவையும் தமது கட்சிக்கோ சஜித்துக்கோ இல்லை எனவும், எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படைக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் பாரிய மோதல் நிலவுவதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் இரகசியமாக கூறி வருகின்றனர் எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்காக பல்வேறு நபர்களையும் இணைத்து ஓரணியில் பயணித்த மகிந்தவால் கோட்டாவின் முன் மாதிரியான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நபர்களையும் திருப்திப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.