என்னைப் போலவே கோட்டாவும் சிக்கியுள்ளார்; மீட்க ஒன்றிணைவோம்..!

0

என்னை போலவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் சிக்கிவிட்டார். நான் எவ்வாறான நெருக்கடியான நிலைமைக்கு உள்ளாகியிருந்தேனோ, அதே​ போன்றதொரு நெருக்கடியான நிலைமைக்கே கோத்தாபய ராஜபக்ஷவும் தள்ளப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவரை மீட்டெக்க வேண்டும். நாம் அவரை அவ்வாறு மீட்டெடுப்பதற்கு, பாராளுமன்றத் ​தேர்தலில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நான். பொலன்னறுவையில் போட்டியிடுவேன். வெற்றியீட்டுவேன். அவ்வாறே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் உறுதி பூண்டு கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.