பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளம் பிக்கு பலி..!

0

தென் மாகாணத்திலுள்ள ஹுங்கமவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது வெறொரு வேன் ஒன்றின் மீது துப்பாக்கி தோட்டா பட்டதில் அதில் பயணித்த குறித்த பிக்கு உரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 21 வயதுடைய பிக்குவே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.