சிறுபான்மை மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க மாவட்ட ரீதியில் ஏஜெண்டுகள்..!

0

தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை பிரித்தாழ்வதற்காக தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை குறைப்பதற்காக சதியை இந்த அரசாங்கத்தின் ஏஜெண்டுகள் என்று மாவட்ட ரீதியாக நியமித்து வருவதாக முன்னால் அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமான ரிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

தற்போது காத்தான்குடியில் கனிபா மதனியின் தலைமையில் இடம் பெற்று வருகின்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது சமூகத்திகாக உருவாக்கப்பட்ட கட்சி இன்று தமிழ் மக்களும் இணைந்து செயற்படும் இயக்கமாக, கட்சியாக தமிழ் – முஸ்லீம் உறவுப் பாலமாக வளர்ந்து வருகின்றது.

இந்த அரசாங்கத்தின் வருகையோடு இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி அதை மூலதனமாக கொண்டு அரசியல் செய்கின்றவர்கள் இந்த நாட்டிலே எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டுமென்று முஸ்லீம்களுக்காக பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற உரிமைகளை கூட இல்லாமல் ஆக்க வேண்டும் என்று பேசி வருவதை நாங்கள் பார்க்கிறோம்

அதே போல இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டிலே ஜனநாயக அரசியலுக்குல் வந்த சிறுபான்மை கட்சிகள் சிறிய கட்சிகளை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சிலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்

இவ்வாறான நிலை இந்த நாட்டிலே சிறுகட்சிகளையும் சிறுபான்மை சமுதாயத்தையும் ஜனநாயகத்தை நம்பி வாழுகின்ற மக்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்ற ஒரு சதியாகவே நாங்கள் பார்க்கிறோம்

தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை பிரித்தால்வதற்காக தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை குறைப்பதற்காக சதியை இந்த அரசாங்கத்தின் ஏஜெண்டுகள் என்று மாவட்ட ரீதியாக செய்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்

எனவே இந்த தேர்தலிலே அவ்வாறான சதிகாரர்களின் சதி வலைக்குள் சிறுபான்மைச் சமூகம் ஏமாந்துவிடாமல் ஒன்றுபட்டு தங்களுடைய பிரதிநிதிகளை தமக்காக தைரியமாக தன்மானத்தோடு வாழ ஒரு நிலையை சமூகத்துக்கு ஏற்படுத்துவதற்காக உழைக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.