120 கோடி சமூக வலைத்தளக் கடவுச் சொற்களுடன் இருவர் கைது..!

0

திருடப்பட்ட 12 பில்லியன் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச் சொற்களை இணைய வலைத்தளம் மூலம் விற்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த இருவரை தாம் கைது செய்துள்ளதாக நெதர்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு டச்சு நகரமான ஆர்ன்ஹெமில் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். பிரிட்டனின் தேசிய குற்றவியல் நிறுவனம், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ மற்றும் ஜேர்மன் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றும் டச்சு சைபர் கிரைம் யூனிட் ஒன்று சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றை சோதனை செய்த போது கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது சந்தேகநபர், 22 வயது, வடக்கு அயர்லாந்தில் கைது செய்யப்பட்டார் எனவும் நெதர்லாந்து காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கைப்பெற்றப்பட்ட கடவுச் சொற்கள் இணையங்கள் ,மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத் தளங்களுடையது என தெரிய வந்துள்ளது , இது குறித்து மேலும் விரிவான தகவல்களை வழங்க நெதர்லாந்து காவல்துறை மறுத்துவிட்டது.