வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்பு; பொலிசாரிடம் சிக்கிய திருடி..!

0

தொடர் சங்கிலி அறுப்புடன் தொடர்புடைய பெண் ஒருவரை வவுனியா வைத்திய சாலைப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (15) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் தொடர் கைவரிசை காட்டும் நபர் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் நீண்ட காலமாக சங்கிலி அறுப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கும் பொலிசார் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.