ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் மற்றும் வடக்கு ஆளுநர் சந்திப்பு..!

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த இச் சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வியாழக் கிழமை) இடம் பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது வடக்கு மாகாண மக்களின் தேவைகள் குறித்தும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.