எச்சரிக்கை; வவுனியாவில் இன்றிலிருந்து 15 நாட்கள் தொடர் மின்வெட்டு..!

0

வவுனியாவில் இன்று முதல் எதிர்வரும் 15 நாட்களிற்கு பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இன்று 16ம் திகதியிலிருந்து 31ம் திகதி வரையிலான காலப் பகுதியில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப் படுவதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர். காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இந்த நேரங்களில் வைத்தியசாலை உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொள்கின்றது.

16.01.2020 ம் திகதி- சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம், ஈரப்பெரிய குளத்திலிருந்து பூஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், பூஓயா இரானுவ முகாம், Recobo North

17.01.2020ம் திகதி- சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம்

18.01.2020ம் திகதி- அவுசதப்பிட்டிய கிராமம்

20.01.2020ம் திகதி- சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம்

21.01.2020ம் திகதி- மகாறம்பைக்குளம் P.S.C, பகல அளுத்வத்த கிராமம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம், சாளம்பைக்குளம்

22.01.2020ம் திகதி- மதவுவைத்தகுளம் கிராமம், சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், மகாறம்பைக்குளம், சாளம்பைக்குளம்

23.01.2020ம் திகதி – மகாறம்பைக்குளம் P.S.C, பகல பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம், பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரைக்கும்

24.01.2020ம் திகதி- மகாறம்பைக்குளம் P.S.C, பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம்

25.01.2020ம் திகதி -பகல அளுத்வத்த கிராமம். பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரைக்கும். மெனிக்பாம் I,II,III மற்றும் IV

27.01.2020ம் திகதி – அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்

28.01.2020ம் திகதி- மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, Gowloom Garments, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம், யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், Air Point Joint Service Army Camp, BOO ஓயா,Recbo North, மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்

29.01.2020ம் திகதி – மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்

30.01.2020ம் திகதி – மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம், பம்பைமடு கிராமம்

31.01.2020ம் திகதி – அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்