ரஞ்சன் ராமநாயக்கவின் செயலால் பதவியிழக்கும் நீதிபதிகள்..!

0

ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் நீதிபதி தம்மிக்க ஹேமபாலவை சேவையிலிருந்து உடனடியாக இடைநிறுத்த நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில் அதில் மூன்று நீதிபதிகளின் குரல் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில் நீதிபதிகள் தம்மிக்க ஹேமபால, கிஹான் பிலப்பிட்டிய, பத்மினி ரணவக்க ஆகியோரின் குரல் பதிவுகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நீதிபதி திகான் பிலாப்பிட்டிய தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக நீதிச்சேவை ஆணைக்குழுவினால், ஜனாதிபதிக்கு பரிந்துரையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் அரசியலமைப்பின் 112வது பிரிவு (அ) நீதிபதி திகான் பிலாப்பிட்டியவினால் மீறப்பட்டுள்ளதாக அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமார்126,000 குரல் பதிவுகள் வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.