ஜனாதிபதி ரம்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் குற்ற பிரேரணை இன்று..!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசியல் குற்ற பிரேரணை இன்று 16 அந்த நாட்டு செனட் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

செனட் சபை உறுப்பினர்களினால் வழங்கப்படும் வாக்குகளுக்கு அமைவாக அமெரிக்க ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் இருக்க முடியாமல் போனால் அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்மிற்கு எதிராக இந்த அரசியல் குற்ற பிரேரணையை காங்கிரஸ் சபையின் சபாநாயகரும், ஜனாநாயக கட்சியைச் சேர்ந்தவருமான நென்சி பெலோசி சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம் தமது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துதல் மற்றும் காங்கிரஸ் சபையின் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்ற பிரேரணை முன்வைக்கப்படிருந்தது.

இந்த குற்ற பிரேரணை அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது செனட் சபை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கு அமைவாகவே இன்று இந்த பிரேரணை செனட் சபையில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இதேவேளை செனட் சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசு கட்சியின் உறுப்பினர்களாவர். இதனால் இந்த பிரேரணை செனட் சபையில் தோற்க்கடிக்கப்பட்டு ஜனாதிபதி வெற்றிபெறுவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.