இலங்கையில் இரண்டாம் ராஜபக்ஸ ஆட்சி உருவாகியுள்ளது – பிமல் ரத்னாயக்க எம்பி

0

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பின் வாங்குவதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என மக்களின் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டாம் ராஜபக்ஷ ஆட்சி உருவாகியுள்ளாக விசனம் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் எதிர்க் கட்சியாக இருந்த போது மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பரவலாக கருத்துக்களை கூறி வந்தது.

எனினும் தற்போது அது தொடர்பான கணக்காய்வு அறிக்கை தேவையற்றது என்று கூறுகின்றது. இதன் மூலம் மத்திய வங்கி விவகாரத்தில் ராஜபக்ஷ தரப்பினரும் தொடர்பு பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுக்கின்றது.

எனவே மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றிய கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் சபாநாயகரிடம் வலியுறுத்துவோம்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சில முக்கிய அரச திணைக்களங்களுக்கு தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. மேலும் சில முக்கிய அரச சேவைகளில் ராஜபக்ஷ குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றிலிருந்து இரண்டாம் ராஜபக்ஷ ஆட்சி உருவாகியுள்ளமை தெளிவாகின்றது.பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களை விடவும் தற்போதைய அரசாங்கமே அது தொடர்பிலான ஆவணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது எனவும் தெரிவித்தார்.