நீதிமன்றத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தியால் ரஞ்சன் விளக்கமறியலில்..!

0

சமூக வலைத் தளங்களில் வெளியான குரல் பதிவினூடாக நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அரசியலமைப்பின் இன் பிரகாரம் அவர் குற்றவாளி என்பதனால் அவரை கைது செய்ய பிடியாணையை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதனை அடுத்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இதனை அடுத்து கொழும்பு குற்றவியல் அதிகாரிகளினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, இன்று பிற்பகல் நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஜனவரி 29 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.