வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களுக்கு வருகிறது ஆப்பு..!

0

ஒரே பாடசாலையில் 7 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த இடமாற்ற கடிதங்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பாடசாலைகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 7 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களுக்கு குறித்த வலயத்திற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பல பாடசாலைகளின் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் பகிரப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பல இடமாற்றங்கள் அரசியல் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உரிய இடமாற்றங்கள் சீராக நடைபெறாமையால் சில பாடசாலைகளின் சில பிரிவுகளை இடைநிறுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக சில பாடசாலைகளில் தமிழ், கணிதம், விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆசிரியர்கள் தட்டுப்பாடாக உள்ள நிலையில் சில நகரப் பாடசாலைகளில் மிகையாக உள்ள நிலை காணப்படுகிறது.

குறிப்பாக வவுனியா செட்டிகுள கோட்டத்தில் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் தட்டுப்பாடாக உள்ள அதேவேளை ஒரு சில பாடங்களுக்கான ஆசிரியர்கள் வவுனியா நகரில் மிகையாகக் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.