பொங்கல் பொங்கி அசத்திய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்..!

0

தமிழர் திருநாளான தைப் பொங்கல் தினத்தில் பொங்கல் பொங்கி கொண்டாடியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ்.

இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் புகைப் படங்களைப் பதிவிட்டிருக்கும் அவர்,

இலங்கையில் தைப் பொங்கலின் அறுவடை நாளைக் கொண்டாடும் அனைவருக்கும், மகிழ்ச்சியான இந்த நாளில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தூதுவரலாயத்தில் பணிபுரியும் அனைவரும் புடவையணிந்து பொங்கல் பொங்கியிருப்பது சுட்டிக் காட்டத்தக்கது.