இரு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானம்..!

0

உக்ரேனிய விமானத்தை 2 ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தியதாக New York Times செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் கமாரக்களின் காணொளிப் பதிவை உறுதி செய்த பின்னர் அந்தத் தகவலை குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

காணொளிப் பதிவில் ஏவுகணை ஒன்று பாய்ச்சப்பட்டவுடன், 30 விநாடி கழித்து மற்றோர் ஏவுகணை பாய்ச்சப்பட்டது தெரிய வந்துள்ளது.

தீப் பற்றிய உக்ரேனிய விமானம் திரும்பி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்ல முயற்சி மேற்கொள்வதை காணொளி பதிவு காட்டியது.

எனினும், சில நிமிடங்களில், விமானம் வெடித்துச் சிதறியது, காணொணிப் பதிவில் தெரிந்தது.இவ் விபத்தில், விமானத்தில் இருந்த 176 பேரும் மாண்டனர்.

அதன் தொடர்பில், ஈரான் அரசு காணொளி எடுத்த நபரை கைது செய்திருப்பதாகவும் சிலரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.