புதிய பிரதேச செயலாளர் நாளை கடமைகளைப் பொறுப்பேற்பு..!

0

வவுனியாவின் புதிய பிரதேச செயலாளராக, மாவட்ட உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் திரு.கமலதாசன் நாளை கடமைகளைப பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனையின் பேரில் அரச அதிபர் ஹனீபாவால் நாளை(16) முதல் அமுலுக்கு வரும் வகையில் இப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த கமலதாசன் கடந்த 2013ம் ஆண்டில் செட்டிகுளம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது வீட்டுத் திட்டம் தொடர்பில் அப்போதய முஸ்லீம் அமைச்சர் ஒருவரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காததால் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டு மாவட்டச் செயலத்துடன் இணைக்கப்பட்டு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த அரசியல்வாதி தற்போதய அமைச்சரவையிலோ, அரசின் பங்காளியாகவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும் குறித்த புதிய பிரதேச செயலாளரின் கடமை சிறக்க தமிழ்பொறி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.