கர்ப்பிணித் தாய்மார்களின் வயிற்றில் அடித்த புதிய அரசாங்கம்..!

0

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கி வந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துமாறு தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் கோப்ஸிட்டி முகாமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது முதல் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு நன்கொடைகள், சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இலவசமாக வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்ட உர மானியம் வழங்கப்படாதுள்ளதுடன், நெல் கொள்வனவையும் கட்டுப்படுத்தியுள்ளது.

அத்துடன் தேர்தல் கடமைக்கு சென்றவர்களுக்கான கொடுப்பனவு, வீட்டுத் திட்ட எஞ்சிய நிதி, மகாபொல நிதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்த வருட நிதி ஒதுக்கீடு, கடந்த வருட அபிவிருத்தி வேலைத் திட்ட நிதி என்பன வழங்கப்படாது காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.