கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தருடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு..!

0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று(14) செவ்வாய் கொழும்பபில் இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய சந்திப்பில் தமிழ் மக்களின் சமகாலப் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.