கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவனின் சடலம் மீட்பு..!

0

கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் மாணவர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கிழக்கு பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கற்று வரும் அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவன் காணாமல் போன நிலையில் இன்று பிற்பகல் கரையாக்கன் தீவினை அண்டியுள்ள பகுதியில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் விடுதிக்கு திரும்பாத நிலையில் மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டமையால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்த்தக்கது.