தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்தின் முன்னால் வெடிபொருள் மீட்பு..!

0

யாழ் சாவகச்சேரியில் உள்ள முன்னாள் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கே.சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் தெரிய வருகையில்,

குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போது இவ் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டது.

குறித்த இடத்தில் மேலும் பல வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.