ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மீண்டும் பிடியாணை; சூடாகும் கொழும்பு அரசியல்..!

0

ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு (CCD) சட்டமா அதிபர் இன்று (14) சற்று முன் அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவால் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்கள், அரசியல்வாதிகள் தொடர்பான 126,000 க்கு மேற்பட்ட குரல் பதிவுகள் பகிரங்கப் படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.