பொதுத் தேர்தலுக்காக அமெரிக்கக் குடியுரிமையை இழக்கும் பசில்..!

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்றமைக்கான காரணம், அமெரிக்காவிலுள்ள தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்காக எனவும் தெரிய வருகின்றது.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ போட்டியிடத் தயாராக இருப்பதனாலேயே அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யவுள்ளார் என மேலும் தெரிய வருகிறது.