ஆளுங்கட்சி விசுவாசிகளுக்கு கோட்டாவின் கடுமையான உத்தரவு..!

0

ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர்கள் மோசடிக்காரர்களாக இருந்தால் ஒரு போதும் பதவி வழங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ கடுமையாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது போலியான குற்றம் சுமத்தி சிறைப்படுத்தியுள்ளது. இதனால் தேர்தலில் உதவியவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடியாமல் உள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் ஒரு போதும் அரசியல் பழிவாங்களை மேற்கொள்ள மாட்டேன். அப்பாவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய மாட்டேன். அவ்வாறானவற்றை செய்ய இடமளிக்க மாட்டேன்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும். எனக்கு உதவினார்கள் என்பதற்காக பாரபட்சம் பார்க்க முடியாது. எனது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட படித்தவர்களை பதவியில் நியமிப்பேன்.

எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படுவதும் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.