துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுதலை..!

0

மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக செட்டிகுளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிசாரால் கடந்த 8 ஆம் திகதி இரவு ஆசிரியர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்றைய தினம் எடுக்கப்பட்டிருந்தது. இதன் போது மன்றில் குறித்த மாணவியின் மருத்துவ அறிக்கை வாசிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் மாணவி துஸ்பிரயோகத்திற்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் சந்தேக நபரான ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் யூன் ஆம் மாதம் 1ம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டது.