மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பெருவிழா கொடியேற்றம்..!

0

மன்னார் மறை மாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை (11.01.2020) பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானபிரகாசம் அடிகளாரால் கொடியேற்றப்பட்டது.

எதிர்வரும் 20.01.2020 திங்கள் கிழமை நடைபெற இருக்கும் இவ் பெரு விழாவை முன்னிட்டு 09 தினங்கள் நவநாட்கள் நடைபெறுகின்றன.

இவ் நவநாட்களில் புதிய சிந்தனை மாற்றத்துடன் எனது வாழ்வை வழமாக்கல்,
சிறுவர்களின் ஆன்மீக வாழ்வில் சமூகத்தின் பங்கு,
இளையோரின் இளமைத் துடிப்பும், இளைஞன் இயேசுவும்,
இறைவனுக்கு சான்று பகரும் குடும்பங்கள்,
அர்ப்பணிப்புள்ள பணி வாழ்வே புதிய வாழ்வுக்கான திறவுகோல்,
வாழ்வுக்கு வலுவூட்டும் திருவழிபாடு,
அன்பிய புதுப்பித்தலும் கிறித்தவ வாழ்வின் முதிர்ச்சியும்,
உறவுகளைப் புதுப்பிக்கும் புதிய சமூதாயமாவோம்
நற்கருணைப் பிரசனத்தில் எமது சாட்சிய வாழ்வு
இறுதியில் புனிதரின் வாழ்வில் புதுப்பித்தலை ஆழப்படுத்துவோம் என்ற கருத்தில் இவ் திருவிழா காலங்களில் சிந்திக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவநாட்கள் வழிபாடுகள் மாலை மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். 19.01.2020 அன்று மாலை 5 மணிக்கு திருச் செபமாலையுடன் திருப்புகழ் மாலையும் நற்கருணை ஆராதனையும் பவனியும் இடம் பெறும்.

அடுத்த நாள் 20/01/2020 பெருவிழா திருப்பலியை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு திருச்சுரூப ஆசீரும் வழங்கப்படும்.