சிறுபான்மை இனத் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – ரிக்ஷாட்

0

நாட்டிலுள்ள சில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி செய்வதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் சிறுபான்மைத் தலைவர்கள் மீது போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் ஒரு அங்கமாக முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுபான்மை கட்சிகளை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன் வைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் றிசாட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முஸ்லீம் திருமணச் சட்டத்தில் சிறுவயது திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விடயங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.