ஒன்பது தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து பரீசில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்..!

0

இன்று சனிக்கிழமை ஜனவரி 11 ஆம் திகதி தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை கண்டித்து இந்த புதிய ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளன.

CGT, CFE-CGC, FO, FSU, MNL, Solidaires, UNEF, UNL ஆகிய தொழிற்சங்கங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

டிசம்பர் 5 ஆம் திகதி வேலை நிறுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் இடம் பெறும் ஐந்தாவது நாள் ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம் பெற்ற நான்காம் நாள் ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் நான்கரை இலட்சம் பேர் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.