முல்லைத்தீவில் அரச ஊழியரை மோதித் தள்ளிய கடற்படை; ஸ்தலத்தில் ஊழியர் பலி..!

0

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடற் படையினரின் வாகனம் மோதியதில் முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தின் முன்பாக கணவன், மனைவி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையின் வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்தவர் முள்ளிவாய்க்கால் உப தபாலக அதிபரான ஜீவன் டினுசா (வயது24) என்றும், உயிரிழந்தவர் அவருடைய கணவரான துணுக்காயைச் சேர்ந்த கே.ஜீவன் (வயது 32) எனவும் தெரிய வருகிறது.

விபத்துடன் தொடர்புடைய சாரதியை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த விபத்து கடற்படையினரின் தவறினாலேயே ஏற்பட்டதாக சம்பவத்தை நேரிலில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.