மாணவி துஸ்பிரயோகம்; வெளியாகியது உண்மை நிலவரம்..!

0

வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரபல பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய போதும் அச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என தமிழ்பொறி கண்டறிந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

குறித்த இந்துநாகரீக பாட ஆசிரியர் குறித்த மாணவியை விடுதிக்கு வருமாறு அழைத்ததாகவும், அதனை அம் மாணவி தனது நண்பிக்குக் கூறியதாகவும், அதன் பின்னர் நண்பி தனது ஆண் நண்பர்களுக்கு கூறியதாகவும் அவர்கள் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து பொலிஸ் மூலம் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை துஸ்பிரயோகம் ஒன்று நடைபெறாத சந்தர்ப்பத்தில் செய்தியை திரிவுபடுத்தி பாலியல் துஸ்பிரயோகம் நடைபெற்றதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. எனினும் குறித்த சம்பவம் தொடர்பான சட்ட, நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாமல் எச் சட்டத்தினூடாக குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்?

அத்துடன் இவ் உணர்ச்சி வசப்பட்ட செயற்பாட்டால் மாணவிக்கும், பெற்றோருக்கும், பாடசாலைக்கும் தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பின் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் அதேவேளை குறித்த ஆசிரியர் தவறில் ஈடுபடாமல் அரசியல் மற்றும் மாணவி போலியாக முறைப்பாட்டைச் செய்திருப்பின் அதனால் ஆசிரியருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் கெளரவத்திற்கும் தீர்வு என்ன?

குறித்த மாணவி 16 வயதைப் பூர்த்தி செய்த அதேவேளை இலங்கைச் சட்டப்படி அவர் சிறுமி என்ற வரையறைக்குள் உட்பட முடியாது எனினும் பாடசாலை மாணவி என்ற வகைக்குள் உள்ளடங்குகின்றார்.

ஒரு பக்க சாட்சியை அடிப்படையாகக் கொண்டு துஸ்பிரயோகம் ஒன்றோ, அங்கச் சேட்டையோ நடைபெறாத நிலையில் எவ்வகையில் குறித்த ஆசிரியரை கைது செய்ய முடியும்?

சிலவேளைகளில் ஆசிரியரின் கடுமையான ஒழுக்காற்று நடைமுறைக்கு பயந்து மாணவி இவ்வாறான போலிக் குற்றச் சாட்டை சுமத்தியிருந்தால் அல்லது மாணவியின் தவறொன்றை கண்டறிந்து வெளிப்படுத்திவிடலாம் என்ற அச்சத்தில் மாணவி அவ்வாறு செயற்பட்டிருந்தால் அதற்கான நீதி என்ன?

இதேவேளை மாணவர்களின் பாதுகாப்பு, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் சமூகம் உயரிய கரிசனை செலுத்துவதை வரவேற்கும் அதேவேளை சிறு வயது காதலர்களை பேரூந்து நிலையம், பூங்காக்களில் இன்றும் காண்கின்றோம்.

எனவே தீர விசாரித்து உண்மை கண்டறியப்படும் வரையில் கற்பனைச் செய்திகளை எழுதுவதைத் தவிருங்கள், ஊடக சுதந்திரத்தை எமது சமூகத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம்.

பாடசாலை தொடக்கம் மாகாண கல்வி அமைச்சு வரை ஒரு முறையான ஒழுக்காற்று விசாரணை நடைமுறை ஒன்று உள்ளது என்பதை மீள ஞாபகப்படுத்துவதுடன் குற்றங்களை அகற்றும் ஆசிரியர்கள் விழுமியப் பண்புகள் நிறைந்தவர்களாக மிளிர வேண்டும் மாறாக ஒரு சிலரின் கீழ்த்தரமான செயற்பாடுகளால் ஒட்டு மொத்த ஆசிரிய சமூகத்திற்கு தலைக் குனிவை ஏற்படுத்துவதை தயவு செய்து தவிருங்கள் என தயவுடன் கோருகின்றோம்!!!