எனக்கு இருக்கும் பிரச்சினையே போதும் – கோட்டா

0

இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களிடம் கடுந்தொனியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்களும், உறுப்பினர்களும் அண்மைக்காலமாக வலியுறுத்திவருகிறார்கள்.

துமிந்த சில்வாவின் உடல் நிலை தொடர்பிலும் கருத்துரைக்கும் அவர்கள், அவர் மோசமான நிலையிலிருப்பதாகவும், எனவே அவரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நேரில் சென்ற அமைச்சர்கள் சிலர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் இதனையடுத்து கோபமடைந்த ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் தான் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் போதுமானதாகும், இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் உரையாடல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையை பயன்படுத்தி துமிந்தவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.