மகிந்தவின் அதிரடி; நெல் உற்பத்திக்கு இலவச உரம்..!

0

சிறுபோகம் ஆரம்பம் முதல் விவசாயிகளுக்கு ஆகக் கூடிய 2 ஹெக்டயர் வரையிலான நெல் செய்கைக்கு உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த வருடம் சிறுபோக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சவைத் தீர்மானம் பின்வருமாறு:

05. நெல் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக உரத்தை வழங்குதல்

‘சௌபாக்கிய தெக்ம’ வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை வலுவுடன் மேம்படுத்துவதற்காக பல்வேறு அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் உர நிவாரண முறைக்கு பதிலாக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக 2020 ஆம் ஆண்டு சிறுபோகம் ஆரம்பம் முதல் நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விசாயிகளுக்கு ஆகக் கூடிய 2 ஹெக்டயர் வரையில் யூரியா மும்மை, சுப்பர் பொஸ்பேட் (ரி.எஸ்.பி) மற்றும் மியூரியெட் ஒவ் பொட்டாஸ் (எம்.ஓ.பி) ஆகிய உர வகைகளின் சிபாரிசு அளவை வழங்கக் கூடிய வகையில் வேலைத் திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப் படுத்துவதற்காக மகாவலி விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிரத்தி அமைச்சர் அவர்கள் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.