ஈரான் மீது பயணத் தடை விதித்தது பிரான்ஸ்..!

0

பிரெஞ்சு மக்களை ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் போர் எவ்வேளையும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப் பட்டுள்ளதால், ஈரானுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால் பயணத்தை தவிர்க்கும் படி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு ஈரானின் அனைத்து பகுதிகளையும் சிவப்பு நிற எச்சரிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.

அத்துடன், நேற்று 7 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை Air France தனது ஈரானுக்கான பயணங்களை இரத்துச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.