யாழ் ஆயரிடம் ஆசி பெற்ற வடமாகாண ஆளுநர் சாள்ஸ்..!

0

வடக்கு மாகாண புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தார்.

புதிய ஆளுநராக கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்று (08) தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆயரிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.