கிளிநொச்சி மாணவனின் உலகம் வியக்கும் புதிய கண்டுபிடிப்பு..!

0

அறிவியலின் வளர்ச்சி இணையாக எமது இளைய தலைமுறையினரின் தேடல்களும், புத்தாக்க முயற்சிகளும் பல மடங்காக வளர்ந்து கொண்டே செல்கின்றது.

இதன் காரணமாக தற்போது சிறுவர்கள், மாணவர்கள் தங்களின் அறிவுத் தேடல்களின் அடுத்த கட்டமாக புத்தாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ் வகையில், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் மாற்றுத் திறனாளிகளுக்கான சூரிய சக்தி (Solar power) சைக்கிளினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8 ல் கல்வி பயின்று வரும் நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்காக கழிவுப் பொருட்களினைக் கொண்டு தனது தாத்தாவின் உதவியுடன் தனது விடா முயற்சியின் மூலம் இதனை கண்டுபிடித்துள்ளர்.

இம் மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நாமும் சிறுவனை உளமார வாழ்த்துவோம்.