வடக்கில் மாணவர்களை ஏற்றாது செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை..!

0

பாடசாலை சீருடையில் பஸ்களுக்காக காத்திருக்கின்ற மாணவர்களை சேவைத் தூரத்தினை கருத்தில் கொள்ளாது அனைத்து பஸ்களும் ஏற்றிச் செல்ல வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அது தவறும் பட்சத்தில் பஸ் உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.செவ்வேள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் பொருட்டு இரு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.