மனிதனின் முள்ளந் தண்டு வடத்தில் காயப்பட்ட நேயாளிகளுக்கு உதவும் ரோபோ..!

0

கொலம்பியாவை சேர்ந்த பொறியலாளர்கள் குழு ஒன்று நவீன வகை ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

குறித்த ரோபோவானது முள்ளந் தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக சமநிலையும் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே இவர்கள் ஒரு இடத்தில் அமரும் போது விழுவதற்கான சாத்தியம் காணப்படும்.

இதனை தடுக்கும் வகையில் குறித்த ரோபோ செயற்படக் கூடியதாக இருக்கின்றது. அது மாத்திரமன்றி ஏனைய செயற்பாடுகளையும் சிரமமின்றி மேற்கொள்ள முடியும்.

இந்த ரோபோவினை வடிவமைத்த கொலம்பிய பொறியியலாளர் குழுவிற்கு இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்றே தலைமை தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.