ஸ்ரீலங்கன் விமான சேவை பயணப் பாதையில் மாற்றம்..!

0

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணப் பாதையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைவாக கொழும்பிலிருந்து லண்டன் நகருக்கான விமான பயணப் பாதையிலேயே மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் ஈரான் மற்றும் ஈராக் வான் எல்லைகளை தவிர்த்து பயணங்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.