கோட்டாவின் அதிரடி நடவடிக்கை; பதவியை ராஜினாமா செய்த மைத்திரியின் சகோதரர்..!

0

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பீ.ஜீ குமாரசிங்க சிறிசேன தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

குறித்த பதவி விலகல் நேற்று முதல் நடைமுறையில் இருப்பதாக டெலிகொம் நிறுவனத்தின் செயலாளர் மஹேஷ் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பீ.ஜீ குமாரசிங்க சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பதும் அண்மையில் கோட்டாவின் அதிரடி காரணமாக இவரின் சம்பளம் 20 இலட்சத்தால் குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.